Man-Animal Conflict

Spread the love

வன விலங்குகளின் தாக்குதலில் அவதிக்குள்ளாகும் தாளவாடி தாலுக்கா மரியாபுரம் சிறு குறு விவசாயிகள்..

சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் மற்றும் பவானி சாகர் வழியே வெளியேறும் யானைகள் மற்றும் புலிகளால் மனித விலங்கு மோதல்கள் தொடர்ந்து நடந்துவருகிறது. விலங்குகள் உணவிற்காக விவசாய நிலங்களை சூறையாடுவதும் விவசாயிகள் தங்கள் வாழ்வாதாரத்தை காப்பாற்றிக்கொள்ள விலங்குகளை திருப்பி தாக்கும் பொழுது ஏற்படும் மனித – விலங்கு உயிரிழப்புகள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. விலங்குகளுக்கு அஞ்சி விவசாயத்தை கைவிட்டுவிட்டு வாழ்வாதாரத்திற்காக ஆடு கோழி மற்றும் அதற்கான தீவன வளர்ப்பில் மட்டுமே ஈடுபட்டுவந்தாலும் உணவிற்காக மனிதர்கள் வாழும் பகுதிகளை நோக்கி விலங்குகள் படையெடுத்துக்கொண்டேதான் இருக்கிறது. இரண்டு நாட்களுக்கு முன்பு தாளவாடி தாலுக் மரியாபுரம் குறு விவசாயிகளின் வீடுகளை யானைகள் சுற்றி வளைத்தது. குழந்தைகளும் வயது மூப்பானவர்களும் அச்சத்தில் குடிசை வீட்டிற்குள்ளேயே முடங்கிக்கிடந்தனர். சென்ற முறை யானைகளை விரட்ட வந்த வனத்துறை அதிகாரியோ தனக்கு உதவ துணைக்கு யாரும் இல்லாமல் ஆயுதங்களும் எதுவும் இல்லாமல் நிராயுதபாணிகளாக களமிறங்கினர். “யானைகளை தாக்கப்படும் மக்கள் ஒருபுறமிருக்க அவர்களை பாதுகாக்க வரும் வன அதிகாரிகள் தற்காப்பு ஆயுதங்கள் எதுவும் இல்லாமல் களமிறக்கப்படுவதால் அவர்களும் தாக்கப்படுவது மிகவும் வேதனை. இதனால் உதவிக்கு அழைத்தாலும் அதிகாரிகள் வரமறுப்பதும், இயலாமையில் அதிகாரிகள் வேலையை துறந்து விடுவதும் வாடிக்கையாகிவிட்டது ” என்கிறார் மரியாபுரம் விவசாயி. இப்பிரச்னைக்கு வனத்துறையும் அதிகாரிகளும் விரைந்து தீர்வு காண தாளவாடி விவசாயிகள் தொடர் கோரிக்கை வைத்துகொண்டிப்பது குறிப்பிடத்தக்கது

en_USEnglish